Zee Tamil Actors Entry in Vijay Tv

ஜீ தமிழ் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு வந்த ஜோடி.

Zee Tamil Actors Entry in Vijay Tv : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் அர்ச்சனா.

இவர் ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பங்கேற்று வந்தவர். பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.

காதலர் தினத்தை முன்னிட்டு காதலே காதலே என்ற நிகழ்ச்சியை தொகுப்பாளினி அர்ச்சனா நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து மேலும் ஜீ தமிழில் இருந்து ரேஷ்மா மற்றும் மதன் ஆகிய இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காதலே காதலே நிகழ்ச்சியில் பங்கு கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.