இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை இவரா இது என வியக்க வைத்துள்ளது.
Yuvan Shankar Raja Childhood Photos : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன்சங்கர் ராஜாவும் இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் இளைய மகனான பிரேம்ஜியும் உறவினர்கள் என்பதை தாண்டி அன்று முதல் இன்று வரை நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
தற்போது பிரேம்ஜி சமூக வலைதளப் பக்கத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார.
அதோடு மட்டுமல்லாமல் சிறுவயதில் நண்பர்கள் மூவரும் எப்படி போஸ் கொடுத்தார்களோ அதேபோல் தற்போது போஸ் கொடுத்து லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர்.
இரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்த ரசிகர்கள் யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜியா அது என வியந்து வருகின்றனர்.
இருவரும் அந்த அளவிற்கு சிறுவயதில் சுட்டித்தனமாக இருந்துள்ளது அந்த புகைப்படத்தில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.