மாஸ்டர் படத்தின் புதிய ட்ரைலர் ரிலீஸ் எப்போது தெரியுமா? - லேட்டஸ்ட் அப்டேட் | Master Trailer Update

Youtube India Clarify on Master Teaser Likes : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் இந்த டீசரில் லைக்குகளை அதிகரிக்க ரூபாய் 8000 வரை செலவழித்ததாக மகேஷ்பாபு ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த வீடியோ குறித்த பதிவை யூடியூப் நிறுவனத்திற்கும் டேக் செய்துள்ளார். இதனையடுத்து யூடியூப் நிறுவனம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் ஒரு வீடியோவில் லைக்குகளை அதிகரிக்க யூடியூப் நிறுவனம் இப்படி போலியான லைக்குகளை யூட்யூப் நிறுவனம் அனுமதிப்பதில்லை என விளக்கம் அளித்துள்ளது.