YouTube video

Students Support to EPS : மாணவர்களுக்கு தினமும் 2GB இலவச டேட்டா, 9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ், பெரிய நிறுவனங்களின் முதலீட்டை ஈர்த்து, வேலை வாய்ப்புக்கு வழிவகுப்பது என்று தொடர்ந்து நலத்திட்டங்களால் இளைஞர் பட்டாளத்தை தன் பக்கம் சாய்த்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் இந்த தருணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல நலத்திட்டங்களை தீவிரமாக அறிவித்து வருகிறார். எல்லோருக்கும் ஏற்றவகையில் நலத்திட்டங்கள் அமைய வேன்டும் என்பதில் கருத்தாய் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நாட்களில் அவர் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும் பெரும்பாலான மக்களை கணிசமாக கவர்ந்துள்ளது. கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த விவசாயிகளின் பயிர்கடன்களையும், ஏழை, எளிய மக்களின் நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளார்.

இது விவசயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து கூட்டுறவு வங்கியில் மகளிர் சுயஉதவி குழு வாங்கியிருந்த கடன்களையும் தள்ளுபடி செய்ததாக அறிவித்தார். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள், திருமணம் ஆகும் பெண்களுக்கு எட்டு கிராம் தங்கம், மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ரூ18,000 நிதி உதவி தொகையும், குழந்தை பிறந்த பின் 16 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகம், வயதானவர்களுக்கு முதியோர் உதவி தொகை என அனைத்து தரப்பு வயது பெண்களுக்கு பல நலத்திட்டங்களை அமைத்தார் முதல்வர்.

அதிமுக அரசு பெண்கள் முன்னேற்றத்திற்கு படிக்கட்டுகள் அமைக்கும் அரசு என்பது நாடறிந்த ஒன்று, தற்போது அது நிரூபணமாகிவிட்டது. பெண்கள் நலனுக்காக நலத்திட்டங்கள் செயல்படுத்துவது மிகவும் வரவேற்கத்தக்கது. இப்படி தேர்தல் நெருங்கும் நேரத்திலும் மக்கள் நலனை பற்றியும் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.