Yogibabu Salary in Thalapathy 65

தளபதி 65 படத்தில் பிரபல காமெடியன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Yogibabu Salary in Thalapathy 65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் கிருபை 35 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது. மேலும் இன்னொரு நாயகியாக அபர்ணா தாஸ் என்பவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் 31ஆம் தேதி நடைபெற்றது. பூஜை நடந்து முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதன் பின்னர் கோபுரம் ஸ்டூடியோஸில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

மேலும் இந்த படத்தில் பிரபல காமெடியனாக யோகிபாபு இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 50 நாட்கள் வரை இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் ஒரு நாளைக்கு ரூபாய் இரண்டு லட்சம் முதல் 5 லட்சம் வரை சம்பளமாக வாங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட ஹீரோயின் வாங்கும் சம்பளத்திற்கு நிகரான சம்பளம் என கூறப்படுகிறது.
யோகி பாபுவின் இந்த அசுர வளர்ச்சி திரையுலகினர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.