Yogi Babu Wife Blessed With Boy Baby

அழகிய ஆண் குழந்தைக்கு அப்பா வாங்கி உள்ளார் நடிகர் யோகிபாபு.

Yogi Babu Wife Blessed With Boy Baby : தமிழ் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து படிப்படியாக வளர்ந்து இன்று முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு.

சிறிய பட்ஜெட் படம் முதல் பெரிய பட்ஜெட் படம் வரை பெரும்பாலான படங்களில் காமெடி நடிகராக யோகி பாபு நடித்து வருகிறார்.

இவருக்கு கடந்த வருடம் கோவில் ஒன்றில் ரகசிய திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார் யோகி பாபு.

அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடியாமல் போனது.

இந்த நிலையில் தற்போது நடிகர் யோகிபாபு அழகிய ஆண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார். ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் யோகி பாபுவுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.