Valimai Movie Update

வலிமை படத்தின் படப்பிடிப்பில் முன்னணி பிரபலம் ஒருவர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Yogi Babu in Valimai Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்.இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இதற்கு முன்னதாக அஜித் நடிக்கும் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து யோகி பாபு நடித்திருப்பார். இருவருக்குமிடையேயான காமெடி காட்சிகள் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தன.

இதனையடுத்து தற்போது மீண்டும் இதே கூட்டணி வலிமை படத்திலும் அமைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது முழுவீச்சாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் யோகி பாபு கலந்து கொள்ள இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் வலிமை படத்திலும் யோகி பாபுவின் அசத்தலான காமெடியை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.