Yashika Anand About Balaji Murugadoss

பிக்பாஸ் பாலாஜிக்கும் தனக்கும் இடையே என்ன உறவு என்பது பற்றி யாஷிகா ஆனந்த் முதல் முறையாக பேசியுள்ளார்.

Yashika Anand About Balaji Murugadoss : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருப்பவர் பாலாஜி முருகதாஸ். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே நடிகை யாஷிகா ஆனந்த் உடன் இணைந்து விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வநதார்.

மேலும் யாஷிகா மற்றும் பாலாஜி ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருந்தன.

இப்படியான நிலையில் ரசிகர் ஒருவர் உங்களுக்கும் பாலாஜிக்கும் இடையே என்ன தொடர்பு என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த யாஷிகா நாங்கள் இருவரும் நட்புடன் இருந்தோம் ஆனால் இப்போது இல்லை. மேலும் நான் பாலாஜி முருகதாசுக்காக சந்தோஷப்படுகிறேன்.

அவர் இந்த வாய்ப்புக்காக பல வருடங்களாக காத்திருந்தார் என்பது எனக்குத் தெரியும் என தெரிவித்துள்ளார்.