Women police get Napkins at Rs 5

ஐந்து ரூபாய் நாப்கின் திட்டத்திற்கு பெண் காவலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Women police get Napkins at Rs 5 : கடலூரில் பெண் காவலர்கள் நலனை கருத்தில் கொண்டு சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சி.அபினவ் IPS துவக்கி வைத்தார்.

மாத சுழற்சியும் அதை ஒட்டிய நாட்களில் பெண் காவலர்களுக்கு ஏற்படக் கூடிய மன ரீதியான பிரச்சினைகளில் இருந்தும், மன அழுத்தத்தில் இருந்து வெளிவர,பணி காலத்தில் சானிட்டரி நாப்கினை சுலபமாக பெற மாவட்ட காவல் அலுவலகம், ஆயுதப்படை வளாகம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 46 காவல் நிலையங்கள், ஆறு மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து காவல் நிலையம், இவை மட்டும் இல்லாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது பயன்படுத்தப்படும் வகையில், மொத்தம் 65 இடங்களில் ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் வெண்டிங் மெஷின் மூலம் சானிடரி நேப்கின் பெறும் வசதியை கடலூர் மாவட்ட எஸ்.பி அபினவ் துவங்கி வைத்தார். இன்று முதல் இந்த முறை பயன்பாட்டிற்கு வரும் என்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை அந்த கருவிக்குள் செலுத்தினால், வெண்டிங் கருவியில் இருந்து ஒரு நேப்கின் வெளிவரும். வெளி சந்தைகளில் விற்கப்படும் நேப்கின்களை ஒப்பிடும்போது, இதன் விலை குறைவாக இருப்பதாகவும், மேலும் பணியில் இருக்கும் நேரத்தில் இது போன்று ஒரு வெண்டிங் கருவி பணிசெய்யும் காவல் நிலையங்களில், கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பது என்பது மாதவிடாய் காலங்களில் ஒரு நல்ல விஷயம் என்று நிகழ்சியில் கலந்து கொண்ட பெண் காவலர்கள் கூறுகின்றனர்.