குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக ராஜா ராணி சீரியல் நடிகை என்ட்ரி கொடுத்துள்ளார்.
Wild Card Entry in Cook With Comali : தமிழ்ச் சங்கத்திலே விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனும் படு விறுவிறுப்பாகரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுரை முத்து, தீபா, தர்ஷ குப்தா ஆகியோர் எலிமினேட் ஆக்கியுள்ளனர். தற்போது அஸ்வின், கனி, பவித்ரா, பாபா பாஸ்கர், ஷகிலா ஆகியோர் மட்டுமே குக்குகளாக பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் ரித்திகா இணைந்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ரித்திகா எந்த அளவுக்கு சமைக்கிறார் எவ்வளவு நாளைக்கு இந்த நிகழ்ச்சியில் டப் கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.