Weight Loss Secrets of Simbu

ரொனால்டோ மாதிரி மாற சிம்பு எடுத்த முயற்சிகள் குறித்து அவரின் உடற்பயிற்சியாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Weight Loss Secrets of Simbu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு மற்றும் ஈஸ்வரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

லாக் டவுனுக்கு முன்பு உடல் எடை கூடி குண்டாக இருந்த சிம்பு தற்போது எடையை மொத்தமாக குறைத்து ஸ்லிம்மாக மாறிப் போயுள்ளார். இவரது எடைக்குறைப்பை பார்த்து தமிழ் சினிமாவே மிரண்டு போய் விட்டது.

இவருடைய எடை குறைப்பிற்கு பின் இருக்கும் ரகசியங்களை உடைத்துள்ளார் அவரது பயிற்சியாளர்.

சிம்பு தன்னிடம் வந்து தன்னுடைய உடல் அமைப்பை ரொனால்டோ மாதிரி மாற்ற வேண்டும் என கூறினார். இதற்காக அதன் பின்னர் அவர் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார். ஆனாலும் அவரது உடல் எடை குறைவதும் ஏறுவதுமாகவே இருந்தது.

மார்ச் மாத லாக் டவுனுக்கு பிறகு அவர் இன்னும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட தொடங்கினார். அதன் பின்னர் அவரது உடல் ரெனால்டோ உடலமைப்பை போல மாறியது என கூறியுள்ளார்.

சிம்பு நடித்துவரும் மாநாடு திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்குகிறார், ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.