Walter Movie Review
அன்பரசன் இயக்கத்தில் சிபி சத்யராஜ், ஷிரின், சமுத்திரக்கனி, நட்டி நடராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வால்டர். இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Walter Movie Review : 

படத்தின் கதைக்களம் :

சிபி சத்தியராஜ் உதவி காவல் கண்காணிப்பாளரான நடித்துள்ளார். கும்பகோணத்தில் உள்ள அரசியல் வாதியான ஈஸ்வர மூர்த்தியின் மகளாக ரித்விகாவும் மருமகனான அபிஷேக் வினோத்தும் ஈஸ்வர மூர்த்தியின் வலது கையாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.

சமுத்திரக்கனியின் நண்பராகவும் டாக்டராகவும் இருக்கும் நட்டி நடராஜ் திடீரென மருத்துவ கவுன்சில் இருந்து நீக்கப்படுகிறார். மருத்துவமனையில் இருந்து குழந்தைகள் கடத்தப்படுகின்றன.

கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டாலும் அடுத்த நாளே இறந்து விடுகின்றனர். சமுத்திரக்கனியும் மர்மமான முறையில் இறக்கிறார்.

சிபிராஜும் அவரது காதலியும் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். அதன் பின்னர் என்னவானது? விபத்தில் இருந்து இவர்கள் மீண்டார்களா? சமுத்திரக்கனியின் கொலைக்கும் குழந்தைகள் கடத்தலுக்கு காரணம் என்ன? என்பது தான் மீதி கதை.

சூர்யாவின் அருவா என்னாச்சு?? எப்போ, எங்கே தொடங்குகிறது? – வெளியானது லேட்டஸ்ட் தகவல்.!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு : 

சிபிராஜ் நாய்கள் ஜாக்கிரதை என்ற படத்திலேயே போலீசாக நடித்திருந்தார். தற்போது வால்டரிலும் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். ஆனால் அடிக்கடி மீசையை முறுக்கினாலும் பெல்ட்டை பிடித்து தூக்கி விட்டால் போதும் இவர் போலீஸ் என பதிந்து விடுவோம் என தப்பு கணக்கு போட்டுட்டார்.

நட்டி நடராஜ் டாக்டரா? ஹீரோவா? வில்லனா? என புரிந்து கொள்ளவே முடியவில்லை, அவரின் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் சரியாக தெளிவுபடுத்தி இருக்கலாம்.

நாயகி ஷிரின் சிபிராஜை துரத்தி துரத்தி காதல் செய்வதும் பாட்டில் நடனமாடுவதுமாக இருந்து விட்டார், ஆனால் ரசிகர்களை ஈர்க்க தவறி விட்டார்.

தொழில்நுட்பம் :

இசை :

தர்ம பிரகாஷின் இசை சுமார் ரகம்.. ரொமான்ஸ் பாடல்களுக்கும் படத்திற்கும் சம்மந்தமே இல்லாமல் போய் விட்டது.

ஒளிப்பதிவு :

ராசமதியின் ஒளிப்பதிவு ஓகே

எடிட்டிங் :

இளையராஜாவின் எடிட்டிங் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். எடுத்த காட்சிகளை எதுக்கு தூக்கி போடணும்னு எல்லாத்தையும் பயன்படுத்தி கொண்டுள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. மருத்துவதுறையில் நடக்கும் ஊழலை கையில் எடுத்தது.

தம்ப்ஸ் டவுன் :

1. எடிட்டிங்
2. லாஜிக்கே இல்லாமல் அடித்து விட்டது.
3. சிபிராஜ் சும்மா சும்மா மீசையை முறுக்கி கொள்வது.

REVIEW OVERVIEW
வால்டர் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
walter-movie-reviewமொத்தத்தில் நல்ல கதையை கொண்ட வால்டர் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கலாம்.