Vantha Rajavaga Than Varuven

VRV Release : வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் மற்றொரு ஜோடியாக மஹத் மற்றும் கேத்ரின் தெரசாவும் நாய்டுது வருகின்றனர்.

இந்த பொங்கலுக்கே படம் ரிலீசாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையாததால் படத்தின் ரிலீஸ் தள்ளி போகவதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது ஜனவரி மாத இறுதியில் இப்படம் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் சிம்பு ரசிகர்களுக்கு இந்த ஜனவரி மாதத்தில் மிக பெரிய கொண்டாட்டம் காத்திருப்பதால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.