VJ Rakshan With His Wife

காதல் மனைவியுடன் 10 வருடத்திற்கு முன்பு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தொகுப்பாளர் ரக்ஷன்.

VJ Rakshan With His Wife : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக வலம் வருபவர் ரக்ஷன். தற்போது இவர் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

ரக்ஷனுக்கு திருமணமாகி குழந்தை கூட உள்ளது என்பதே இந்த நிகழ்ச்சியின் மூலமாக தான் தெரிய வந்தது. அதன் பின்னர்தான் ரக்ஷனும் தன்னுடைய மனைவியின் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது ரக்ஷன் இருவரும் பத்து வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் பத்து வருடத்திற்கு முன்பு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.