VJ Manimegalai Shocking Tweet About Cook With Comali

நடிகை மணிமேகலை விபத்தில் சிக்கியதாக பதிவிட்டுள்ளார். இதனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு என்னை கூப்பிட்ட நாளில் நிகழ்ச்சி பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

VJ Manimegalai Shocking Tweet About Cook With Comali : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. வித்தியாசமான சமையல் நிகழ்ச்சியான இதில் மணிமேகலை கோமாளியாக பங்கேற்று வருகிறார். தனக்கென ஒரு காமெடி டிராக்கை பிடித்து அதில் பயணித்து தனக்கான ரசிகர் கூட்டத்தை சேர்த்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு என்னால் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார் மணிமேகலை. ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வாழ்வதுதான் வசதியான வாழ்க்கை. ரீசண்டா படிச்சேன் இந்த குவாட்ஸ் நல்லா இருக்கு என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ஒரு சிறிய விபத்து ஏற்பட்டதாகவும் தற்போது நலமாக இருப்பதாகவும் விரைவில் நிகழ்ச்சியில் பங்கேற்பேன் எனவும் தெரிவித்துள்ளார். உங்களின் நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதே பதிவில் குறிப்பு என சுடுதண்ணி தூக்கும்போது பார்த்து தூக்குங்க என குறிப்பிட்டுள்ளார். இதனால் இவர் மேலே சுடு தண்ணியை கொட்டிக் கொண்டே இருப்பார் என கூறப்படுகிறது.

Attachments area