VJ Maheshwari Participate in BB4

அர்ச்சனாவுக்கு ஆப்பு வைக்க கவர்ச்சிப் புயலாக பலமுறை தொடங்கியுள்ள விஜய் டிவி தொகுப்பாளினி யை களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VJ Maheshwari Participate in BB4 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது 61 ஆவது நாளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.

மொத்தம் பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா மற்றும் சம்யுக்தா என ஐந்து பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து சனம் ஷெட்டி இன்று வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வரும் அர்ச்சனாவுக்கு ஆப்பு வைக்கும் வகையில் தொகுப்பாளினி ஒருவரை களமிறக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆம் தற்போது கவர்ச்சி புயலாக வலம் வரத் தொடங்கியிருக்கும் தொகுப்பாளினி மகேஸ்வரி தான் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைய உள்ளார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் மகேஸ்வரியின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூசகமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் அவர் வீட்டிற்குச் செல்வது உறுதி என கூறப்பட்டு வருகிறது.

ஆனால் உண்மையில் மகேஸ்வரி பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வாரா இல்லை அந்த பதிவு வேறு எதைப்பற்றியாவது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.