VJ Jacqueline About Pugazh

திட்டித் தீர்த்து வந்த புகழ் ரசிகர்களுக்கு ஜாக்குலின் வீடியோ ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

VJ Jaqquline About Pugazh : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் புகழ்.

தற்போது இவருக்கென மாபெரும் ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் விஜய் டிவியில் தேன்மொழி பிஏ என்ற சீரியலில் நடித்து வரும் ஜாக்குலின் வீடியோ ஒன்றில் புகழை எனக்கு பிடிக்காது என கூறி இருந்தார்.

இதனால் புகழ் ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வந்தனர். உங்களுக்கு புகழ் வேணா ஆனால் ரசிகர்கள் மட்டும் வீடியோ பார்க்க வேண்டுமா என்று திட்டி தீர்த்து வந்தனர். இப்படியான நிலையில் தற்போது இன்னொரு வீடியோவில் நான் விளையாட்டுக்காக சொன்னேன்.

எனக்கு புகழை பிடிக்கும், இது அவருக்கும் தெரியும். 1000 பேருக்கும் தெரியும். உங்களுக்கு ஏன் தெரியலை? ஏன்னா நீங்க இன்னோசன்ட் என தெரிவித்துள்ளார்.