VJ Chitra's husband Hemanth gets conditional bail

சித்ரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத் நிபந்தனை ஜாமீன் கொடுத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

VJ Chitra’s husband Hemanth gets conditional bail : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தொகுப்பாளினியாக இருந்து படிப்படியாக உயர்ந்து தனக்கென சின்னத்திரையில் இடம் பிடித்தவர் சித்ரா.

சமீபத்தில் தன் கணவருடன் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி சென்னை பூந்தமல்லியில் உள்ள ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரான ஹேம்நாத் தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.