VJ Chithu About Her Engagement
VJ Chithu About Her Engagement

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு தீயாக பரவிய செய்தி ஒன்றால் அப்செட் ஆகியுள்ளார் விஜே சித்ரா.

VJ Chithu About Her Engagement : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக சீரியல்களில் நடிகையாகவும் நடித்து வருபவர் சித்ரா. அதிலும் குறிப்பாக இவர் விஜய் டிவியில் நடித்துவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த சீரியலுக்கு பிறகு சித்ராவிற்கு என தனி ஆர்வம் எல்லாம் உருவாகியுள்ளது. அடிக்கடி லைவ் சேட்டில் ரசிகர்களுடன் உரையாடி வந்த சித்ராவிடம் பெரும்பாலும் ரசிகர்கள் உங்களுக்கு எப்போது கல்யாணம் என தொடர்ந்து கேட்டு வந்தனர்.

தற்போது அது நடக்க உள்ளது. தொழிலதிபரான ஹேமந்த் ரவி என்பவருடன் சமீபத்தில் சித்ராவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு திடீர் நிச்சயதார்த்தம்?? மாப்பிள்ளை யார் தெரியுமா?

நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த கையோடு ஹேமந்த் குறித்த ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. அதாவது என்னுடைய வருங்கால கணவர் ஹேமந்த் ரவிக்கு திருவேற்காடு பக்கத்தில் பிரம்மாண்ட கல்யாண மண்டபம் ஒன்று இருப்பதாக சில பரபரப்புக்காக யாரோ கிளப்பி விட அது தீயாக பரவியுள்ளது.

ஆனால் உண்மையில் அவருக்கு அப்படி திருமண மண்டபம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். இது போன்ற பொய் செய்தியால் தான் மிகவும் அப்செட் ஆனதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.