VJ Chithra Marriage Details

தற்கொலை செய்துகொண்ட சித்ராவிற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே திருமணம் நடந்து முடிந்து விட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

VJ Chithra Marriage Details : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் இன்று காலை 4 மணிக்கு சென்னை 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த ஹோட்டலில் அவருடைய கணவர் ஹேம்நாத் அவர்களும் தங்கி இருந்ததாக கூறப்பட்டது.

சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவின் வருங்கால கணவர் ஹேம்நாத் அவருடன் தங்கி இருந்த காரணத்தினால் அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு (அக்டோபர் 19 ) தனக்கும் சித்ராவுக்கும் பதிவு திருமணம் நடந்து முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

திருமணமான 2 மாதத்தில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.

சீரியல் குழுவிற்கும் இந்த தற்கொலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா எனவும் அவர்கள் விசாரித்து வருகின்றனர் என தெரிய வந்துள்ளது.