Vj Chithra About Vijay

விஜயை சந்திக்க வாய்ப்பு கிடைத்தும் பார்க்க செல்லாமல் இருந்துள்ளார் சித்ரா. அதற்கான காரணத்தை அவர் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.

Vj Chithra About Vijay : தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்த இவர் இரு தினங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் மற்றும் தன் அம்மா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் ரசிகர்கள் சித்ரா இதுவரை பேசிய வீடியோக்கள், கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், டிக் டாக் வீடியோக்கள் போன்றவற்றை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அவரை பற்றி பேசி வருகின்றனர்.

இப்படியான நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் சித்ரா பேட்டி ஒன்றில் விஜயை சந்திக்க வாய்ப்பு கிடைத்தும் தான் சந்திக்காதது ஏன் என பேசியுள்ள வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

அதாவது தளபதி விஜய்யை தன்னுடைய திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இதுவரை அவரை பார்க்காமல் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தளபதி விஜயின் ஸ்டைல் குறித்தும் அவர் பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ

https://twitter.com/Sakthii_VFC/status/1336874964473978880?s=19

விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.