Vivek Thanks to Meme Creators : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தில் நிலைத்து நிற்கும் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக். இவர் இளைஞர்களுக்கு என நாட்டுப்பற்று உடைய கருத்துக்களையும் சமூகத்தில் மாற்றம் ஏற்பட தேவையான விழிபுணர்வுகளையும் நகைச்சுவை கலந்த காமெடியை தனது படங்களில் கொடுப்பது தான் இவருடைய வழக்கம்.
தற்பொழுது லாக் டவுன் காலகட்டத்தில் இவருடைய கருத்துசெறிவு நிறைந்த காமெடிகள் கலந்த மீம்சுகள் பலவும் நெட்டிசன்கள் ஆல் உருவாக்கப்பட்டு ஷேர் செய்யப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் உங்கள் கருத்துக்களால் இளைஞர்களுக்கு நல்ல அறிவுரைகளை மிக எளிதாக கொண்டு சேர்க்க முடிகிறது என்று பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இதற்கு பதிலளித்த விவேக் “என்னைப் போன்ற கலைஞர்களுக்கு ரசிகர்களின் பாராட்டு தான் மிகப் பெரிய டானிக்.. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!” என்று பெருமிதத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மிக்க நன்றி. இது போன்ற பாராட்டுக்கள் என் போன்ற நடிகர்களுக்கு டானிக். https://t.co/isRCEl6bxo
— Vivekh actor (@Actor_Vivek) August 7, 2020