Vivekh UnPair Actor

நகைச்சுவை நடிகர் விவேக் கடைசிவரை இணைந்து நடிக்காத தமிழ் நடிகர் யார் என தெரியுமா?? வாங்க பார்க்கலாம்.

Vivekh in Cinema History : தமிழ் சினிமாவை பிரபல நடிகராக வலம் வந்தவர் விவேக். 500க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். அஜித், விஜய், அஜித், தனுஷ், சிம்பு என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் நேற்று முன்தினம் கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 4.35 மணிக்கு உயிரிழந்தார்.

இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் அவரது வீட்டில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

இதில் சமூக வலைதளங்கள் முழுக்க நடிகர் விவேக் குறித்த தகவல்கள் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. தமிழ் சினிமாவில் பல படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அதுவே உலக நாயகன் கமலஹாசனுடன் மட்டும் ஒரு முறை கூட இணையவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று.

சில படங்களில் வாய்ப்பு அமையும் கடைசியில் அது கை கூடாமல் போய் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது கமல்ஹாசன் படங்களில் காமெடியையும் அவரே பார்த்துக் கொள்வார். அவருடைய படங்களில் காமெடி எங்களுக்கு பெரிய அளவில் வேலை இருக்காது என்பது தான் என கூறப்படுகிறது.