ஐந்து வருடங்களுக்கு பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நடிகர் விவேக்.

Vivekh Birthday Celebration in Indian 2 Set : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இதுவரை இவருடன் இணைந்து நடிக்காத நடிகர்களில் ஒருவர் விவேக். தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த இவர் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். அப்துல் கலாமின் கோரிக்கை ஏற்று தமிழகம் முழுவதும் 27 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உள்ளார்.

இவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்றைய முன் தினம் மரணமடைந்தார். விவேக்கின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.

மேலும் சமூக வலைதளங்களில் விவேக் பற்றிய பதிவுகள் தான் அதிக அளவில் இடம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது இவர் இந்தியன் 2 படப்பிடிப்பில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இதுவரை கமலுடன் இணைந்து நடிக்காமல் இருந்து வந்த விவேக் முதன்முறையாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அதுவும் அவரால் முடித்துக் கொடுக்க முடியாமல் நம்மை விட்டு பிரிந்து வட்டார் என்பது தான் வேதனை.