Vivek about COVID-19
Vivek about COVID-19

கொரானாவால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய அனுமதிக்காத பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விவேக்.

Vivek about COVID-19 சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதுவரை தமிழகத்தில் மட்டும் 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்த்த டாக்டருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

முன்னணி தமிழ் இசையமைப்பாளர் இசையில் கொரானா பாட்டு பாடிய நாய் – இணையத்தில் வைரலாகும் வீடியோ

உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் மூலமாகவோ அல்லது அவர்களின் உடலில் இருந்து மற்றவர்களுக்குப் பரவாது என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும் பொதுமக்கள் டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருவதால் நடிகர் விவேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இறந்தவர் உடலிருந்து கொரானா பரவாது என்பதை உணருங்கள். நமக்காக உயிரை பணையம் வைத்து உழைக்கும் மருத்துவர்களுக்கு மரியாதை கொடுங்கள் என கூறியுள்ளார்.