Viswasam Trailer

Viswasam Trailer : விஸ்வாசம் படத்தின் டீசருக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது ட்ரைலர் குறித்த தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இம்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் வேளையில் ட்ரைலர் குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது வரும் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

வீரம் படத்தின் ட்ரைலரும் இதே புத்தாண்டு தினத்தில் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த டீஸர் நெல் ஜெயராமன் மறைவு மற்றும் சில காரணங்களால் தான் தள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.