Viswasam Trailer Vs Master Teaser

விஸ்வாசம் படத்தின் இரண்டு வருட சாதனையை நான்கே நாளில் அடித்து நொறுக்கி உள்ளது மாஸ்டர்.

Viswasam Trailer Vs Master Teaser : தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவரின் படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் மாறி மாறி சாதனை படைத்து வருவது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் டீசர் என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது என ரசிகர்கள் லிஸ்ட் போட தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான தல அஜித்தின் விசுவாசம் படத்தில் இதுவரை 33 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

ஆனால் இந்த தீபாவளிக்கு வெளியான விஜய்யின் மாஸ்டர் பட டீஸர் 34 மில்லியன் பார்வையாளர்களை பெற்று விஸ்வாசம் பட சாதனையை அடித்து நொறுக்கியுள்ளது.

இது குறித்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட அது ட்ரைலர் இது டீசர் இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது என ரசிகர்களிடையே பஞ்சாயத்தும் தொடங்கியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.