Viswasam Ajith with Nayanthara

Viswasam Thiruvizha : முதல் முறையாக தல அஜித்தின் படத்திற்கு மட்டுமே ஒரு விசியம் அஜித் ரசிகர்களால் அரங்கேறியுள்ளது. அந்த வீடியோவும் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க டி.இம்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் என பல முக்கிய திரையுலக பிரபலங்கள் ஒன்றிணைந்து நடித்துள்ளனர்.

[ இதையும் படிங்க : விஸ்வாசம் கிளைமாக்ஸ் சீக்ரெட்டை உடைத்த பிரபலம் – இது செம ட்ரீட் தான்.! ]

இப்படம் உலகம் முழுவதும் நாளை ( ஜனவரி 10 ) முதல் திரைக்கு வர உள்ளது. இதனால் தல ரசிகர்கள் பலரும் பேனர், கட் அவுட், போஸ்டர் என தங்களது கொண்டாட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சேலம் ஓமலூர் பகுதியில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றில் விஸ்வாசம் படத்திற்காக லெட் லைட்டால் ஆன பேனர் வைக்கப்பட்டுள்ளது.

படத்திற்காக லெட் லைட் பேனர் வைத்திருப்பது இதுவே முதல் முறை என்பதால் தல ரசிகர்கள் இதனை ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

[ இதையும் படிங்க : தளபதி கோட்டையான கேரளாவில் அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு ரசிகர்கள் செய்ததை பாருங்க – வைரல் வீடியோ.! ]

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.