Viswasam Poster

Viswasam Poster : சந்தேகத்தில் இருந்த விஸ்வாசம் ரிலீஸ் குறித்த தகவலை சம்மந்தப்பட்ட நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.

மேலும் ட்ரைலரை ரிலீஸ் செய்த போது வெறும் டீவீட்டில் மட்டுமே விஸ்வாசம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அறிவித்து இருந்தார்களே தவிர ட்ரைலரில் குறிப்பிடவில்லை.

ரசிகர்கள் பலர் சென்னையில் உள்ள பிரபல திரையரங்க உரிமையாளர்களிடம் டிக்கெட் புக்கிங் குறித்து கேட்டதற்கு ரிலீஸ் குறித்த தகவலும் ஒப்பந்தமும் இன்னும் முடிவாகவில்லை என ட்வீட் செய்திருந்தனர்.

இதனால் விஸ்வாசம் ரிலீஸ் தள்ளி போகுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

இந்நிலையில் தற்போது படத்தை வெளியிட உள்ள KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் விஸ்வாசம் திட்டமிட்டபடி ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவித்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.