Viswasam Bussiness : ரிலீஸுக்கு பக்காவாக விஸ்வாசம் படம் தயாராகி விட்டதை படக்குழு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் 4-வது முறையாக தல அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, விவேக் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இப்படத்தின் தமிழ்நாடு ரைட்ஸை பிரபல முன்னணி நிறுவனமான KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கி இருந்தது.
தற்போது இந்த நிறுவனத்திடம் இருந்து பகுதி வாரியாக ரிலீஸ் உரிமையை பிரபல விநியோகிஸ்தர்கள் கைப்பற்றி உள்ளனர்.
இதனை KJR ஸ்டுடியோஸ் நிறுவனமே அதிகாரபூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. சென்னை ரிலீஸ் உரிமையை சத்யம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
அதேபோல் திருச்சி ரிலீஸ் உரிமையை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே கைப்பற்றியுள்ளது.
முழு விவரமும் இதோ
Ellaa arealayum mass release ku naanga ready! Pongal ah adichu thookka neenga ready ah? #Viswasam Pongal on the way – get ready well wishers! ????????????#ViswasamAllAreasSoldOut pic.twitter.com/V5C0zCTn99
— KJR Studios (@kjr_studios) December 21, 2018