Vishnu Vishal Tatto Photo

திருமணம் முடிந்த கையோடு கையில் டாட்டூ புகைப்படத்தை வெளியிட்டார் விஷ்ணு விஷால்.

Vishnu Vishal Tatto Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2008-ல் ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரியன் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா குட்டாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு கையிலிருக்கும் டாட்டூவை புகைப்படம் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஏ மற்றும் ஆர் என்ற எழுத்துக்கு என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முதல் மனைவி ரஜினி மற்றும் மகன் ஆர்யனா? எனக் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் ஏ ஆர் ரகுமானின் ரசிகனா என கேட்கின்றனர். இன்னும் சிலர் எதுக்கு அவெஞ்சர்ஸ் லோக போட்டு இருக்கீங்க என கேள்வி எழுப்புகின்றனர். சிலரோ விஷ்ணுவிஷால் மனைவி மகனை விட்டுவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டது விமர்சனம் செய்துள்ளனர்.