Vishnu Vishal Decision on Second Marriage

கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் தன்னுடைய இரண்டாவது திருமணம் விவகாரத்தில் விஷால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Vishnu Vishal Decision on Second Marriage : தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே ரஜினி என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை காதலித்து வந்தார். இருவருக்கும் நிச்சயம் முடிந்த நிலையில் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

ஆனால் தற்போது கொரானா வைரஸ் பரவல் மீண்டும் அதி தீவிரமாக உள்ளதால் தங்களது திருமணத்தை பதிவு மூலமாக செய்து கொள்ள விஷ்ணு விஷால் முடிவெடுத்துள்ளார். வைரஸ் தாக்கம் குறைந்து பின்னர் தான் ரிசப்ஷனில் கூட நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.