Vishal Support to Kangana Ranaut
Vishal Support to Kangana Ranaut

தமிழ் சினிமாவின் முதல் ஆளாக கங்கனா ரனாவத்திற்கு ஆதரவு தெரிவித்து விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Vishal Support to Kangana Ranaut : பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம் குறித்து மகாராஷ்டிரா முதல்வர் பற்றியும் மும்பை பற்றி தவறாக பேசுகிறார்.

இதனால் மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியாக இருந்து வரும் சிவசேனா கட்சி அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

மேலும் மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கணா ரணாவத் வீட்டில் பல்வேறு கட்டிடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால், நேற்று (செப்டம்பர் 9) மும்பை மாநகராட்சி நிர்வாகம் அவரின் வீட்டை இடித்தது. அவர் மும்பை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

படத்தை நிராகரித்த பிசி ஸ்ரீராம் – கங்கனா ரனாவத் கொடுத்த பதிலடி..!

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இருந்து கங்கனா ரனாவத் செயல்களுக்கு முதலாக ஆதரவுக் கொடுத்துள்ளார் விஷால்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள். எது சரி எது தவறு என்பது பற்றி குரல் கொடுக்க நீங்கள் தயங்கியதே இல்லை.

உங்களுக்கு அரசுக்கும் தனிப்பட்ட பிரச்சனை இல்லை என்றாலும் வலிமையாக தொடர்ந்து போராடி வருகிறீர்கள். நீங்கள் செய்தது 1920-ல் பகத் சிங் செய்ததற்கு ஒப்பானது என பாராட்டியுள்ளார்.

மேலும் உங்களுக்கு வாழ்த்துக்கள், உங்களின் முயற்சிக்கு தலைவணங்குகிறேன் எனவும் கூறியுள்ளார்.