Vishal Marriage

நடிகர் விஷாலின் திருமணம் நின்று பிரபல நடிகையுடனான காதல் தான் என தெரிவித்துள்ளார்.

Vishal Marriage Issue : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.

இவருக்கு அனிஷா என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளது. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

ஆனால் திடீரென அனிஷா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கினார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரச்சனைகள் எழுந்ததாக கூறப்பட்டது.

அதன் பின்னர் மீண்டும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனாலும் இதுவரை திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இப்படியான நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் விஷாலுக்கும் லட்சுமி மேனனுக்கும் இடையே இருந்த காதல் தான் அவருடைய திருமணம் நின்று போக காரணம் என தெரிவித்துள்ளார்.

விஷால் மற்றும் லட்சுமி மேனன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.