Vishal Fiance Anisha Allah Marriage

விஷாலுடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vishal Fiance Anisha Allah Marriage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகும் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார்.

நடிகர் சங்கத்தில் பாண்டவர் அணி செயலாளராக இருந்த இவர் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தார்.

அதன் பின்னர் விஷாலுக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த தொழிலதிபரின் மகளுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையறிந்த ரசிகர்கள் பலரும் யார் அந்த மாப்பிள்ளை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.