Vishal Entry in Bollywood Cinema

நடிகர் விஷால் அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vishal Entry in Bollywood Cinema : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஷால் இவரது நடிப்பில் இறுதியாக சக்ரா என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் எனிமி, துப்பரிவாளன் 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஷாலே இயக்கி நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து விஷால் அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு விஷால் மற்றும் அர்ஜுன் கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற இரும்புத்திரை படத்தின் இந்தி ரீமேக்கில் விஷால் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விஷால் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.