யுவன் சங்கர் ராஜா இசையில் விஷாலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vishal 31 Movie Announcement : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால்‌. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகும் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். மேலும் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது விஷால் 31 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக உள்ள இந்த படத்தினை குள்ளநரி கூட்டம், தேன் உள்ளிட்ட படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய து.பா சரவணன் இயக்க உள்ளார்.

இவர் எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்தவர். விஷால் இந்த குறும்படத்தை பாராட்டியதைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.