virat kohli speech : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News, MS.Dhoni

virat kohli speech :

நடந்து கொண்டு இருக்கும் 2019 – ஆம் ஆண்டின் உலக கோப்பையில் கோலி வேறு பரிமாணத்தில் விளையாடி வருகிறார்.

இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் விளாசிய போதிலும், ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதே சமயத்தில் துணைக் கேப்டனான ரோகித் சர்மா ஐந்து சதங்கள் விளாசியுள்ளார்.

ரோகித் சர்மா ஐந்து சதங்கள் அடித்தது மிக மிக சந்தோசம், இந்த உலகக்கோப்பையில் என்னுடைய ரோல் மாறுபட்டது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பையில் நான் மாறுபட்ட ரோலில் விளையாடி வருகிறேன். உலகக்கோப்பை தொடரில் கேப்டனாக இருக்கும் நான், எந்தவிதமான ரோலாக இருந்தாலும் அணிக்கு அது தேவையென்றால் செய்தாக வேண்டும்.

தொடர்ச்சியாக ரோகித் சர்மா சதம் அடிப்பது சந்தோசமான விஷயம். போட்டியில் சுமார் 20 ஓவர்களுக்குப் பின் மாறுபட்ட ரோலில் விளையாட வேண்டும்.

மிடில் ஓவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், எம்எஸ் தோனி போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாட வைக்க வேண்டும்.

தற்போது ரிஷப் அணியில் இடம் பிடித்து அவரது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

2019-உலக கோப்பை இந்தியாவின் முதல் தோல்வி, பாகிஸ்தானை பழிவாங்கியதா இந்தியா?

நான் தற்போது செய்து கொண்டிருக்கும் ரோல் ஒருநாள் போட்டியில் மாறுபட்டது என்பதை புரிந்து கொண்டேன். மேலும், ஆட்டத்தின் சூழ்நிலை எவ்வாறு செல்கிறதோ, அதற்கு ஏற்றபடி பேட்டிங் செய்ய வேண்டும்.

ஒரு பக்கம் நிலைத்து நின்று மறுபக்கத்தில் விளையாடும் வீரர்கள் ஸ்டிரைக் ரேட் 150, 160 அல்லது 200 ஆக இருக்கும்போது மிக சந்தோசமாக இருக்கிறது. தேவைப்பட்டால் மறுபக்கத்தில் நான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.

ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடியதன் மூலம் இந்த உலகக்கோப்பையில் நான் அதிக விஷயங்களை கற்றுக் கொண்டேன். இது தான் நமது ரோல் என்பதால், அதற்கு ஏற்றவாறு விளையாட வேண்டும்’’ என்றார் கோலி.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.