Bharathi Kannamma

இரண்டு குழந்தைகளுடன் பாரதி கண்ணம்மா ஒன்று சேர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Viral Photo of Bharathi Kannamma : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இதில் நாயகனாக அருண் பிரசாத் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ரோஷினி ஹரிப்ரியன் நடிக்கிறார்.

தற்போது சீரியலில் இவர்கள் இருவரையும் பிரித்து தனித் தனியாக வாழ்ந்து வருகின்றனர். பாரதியிடம் ஒரு மகளும் கண்ணம்மாவிடம் ஒரு மகளும் வளர்ந்து வருகிறது. இவர்கள் இருவரும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் இரண்டு குழந்தைகளுடன் இணைந்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சீரியலில் இவர்கள் விரைவில் இணைந்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.