VIP Movie Secrets
VIP Movie Secrets

தனுஷின் தம்பியாக நடிக்க சிவகார்த்திகேயன் தன்னை போன் செய்து அழைத்ததாக விஜய் டிவி பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

VIP Movie Secrets : தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகராக வலம் வருபவர் விக்னேஷ் கார்த்திக். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பகல் நிலவு என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் பல்வேறு குறும்படங்களையும் இயக்கி நடித்து வருகிறார். இவருடைய குறும்படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு.

அந்த ஒரு வீடியோவால் நடந்த திடீர் மாற்றம்.. கௌதம் மேனனுக்கு போன் அடித்து சிம்பு வைத்த கோரிக்கை – என்ன நடந்தது தெரியுமா?

இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனுஷ் படத்தை தவற விட்ட சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

ஒருநாள் சிவகார்த்திகேயன் இடம் இருந்து போன் வந்தது. நடிக்க விருப்பம் இருக்கா என கேட்டார். ப்ரோ என்ன புரியும் நிச்சயமா பண்ணலாம் சொல்லுங்க என கூறினேன்.

விஐபி படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடிக்க கேட்கிறாங்க இன்னைக்கு சாயங்காலம் ஆடிஷனுக்கு வந்துடு என கூறினார்.

நான் அப்போது ஒரு ஷோவில் கமிட்டாகி இருந்தேன். மறுநாள் போன் செய்து கேட்டபோது அந்த கதாபாத்திரத்திற்கு வேறு ஒருவர் கமிட் ஆகி விட்டதாக கூறினார்கள்.

விஐபி படத்தில் தனுஷுக்கு தம்பியாக ரிஷிகேஷ் என்பவர் நடித்திருந்தார். இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி இருந்தார்.

வெறும் ரூபாய் 6 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூலில் 100 கோடியை தாண்டி சாதனை படைத்தது.

வலிமையில் இணைந்த பிரபல நடிகரின் மகன்.. யார் தெரியுமா? அதுவும் இப்படியொரு வேடத்தில் நடிக்கிறாராம்.!

இந்த வெற்றியின் காரணமாக தனுஷின் மச்சினிச்சியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார்.

ஆனால் அப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் கார்த்திக் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் வைத்து திட்டம் 2 என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.