விக்ரம் படத்தின் டீசர்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் வெப்சீரிஸ் தொடர் ஒன்றின் காப்பி என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விக்ரம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் டைட்டில் டீஸர் கமல்ஹாசனின் பிறந்த நாள் அன்று வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த டீசர் வெப்சீரிஸ் தொடர் ஒன்றில் காப்பி என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார் அவர் லோகேஷ் மாட்டிகிட்டே பங்கு என குறிப்பிட்டு இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

வீடியோவை பார்க்கும் போது இது Narcos Mexico என்ற படத்தின் காப்பி என தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/fincherist/status/1325082708901425152?s=20
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.