Vikram in New Movie Update

சூர்யா கை விட்ட இயக்குனருக்கு சியான் விக்ரம் கை கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vikram in New Movie Update :தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரி. பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள இவர் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்க இருந்தார்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதற்குள் கொரானா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதால் இந்த படம் பற்றிய பேச்சு அப்படியே அடங்கியது.

மேலும் நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதனால் அருவா திரைப்படம் கைவிடப்பட்டு விட்டதாகவே பேசப்பட்டு வந்தது.

நடிகர் சூர்யா அருவா படத்தினை டீலில் விட்டதால் தற்போது ஹரி வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இதனால் அவருக்கு சியான் விக்ரம் வாய்ப்பு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹரி, விக்ரம் கூட்டணியில் சாமி திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் அருள் திரைப்படம் வெளியாகி அதுவும் வெற்றியை சுவைத்தது.

மூன்றாவது முறையாக இவர்கள் கூட்டணியில் சாமி ஸ்கொயர் என்ற திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் போனது. இப்படியான நிலையில் தற்போது இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.