Vikram in Cobra Release Details

நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படம் OTT வழியாக வெளியாக இருப்பதாக தகவல் பரவிய நிலையில் படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Vikram in Cobra Release Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் கோப்ரா இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துவிட்ட நிலையில் தற்போது திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என அரசு உத்தரவிட்டுள்ளதால் இந்தப் படத்தினை ‌OTT வழியாக வெளியிட இருப்பதாகவும் பிரபல நிறுவனம் பெரிய விலை கொடுத்து இந்த படத்தை வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனால் விக்ரம் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் படக்குழு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. கோப்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும். OTT வழியாக வெளியாகும் என தகவல் வெளியானது வதந்தி தான் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.