Vikram 58
விக்ரம் 58 படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், இர்பான் பதான் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம் 58.

விக்ரம் பல விதமான கெட்டப்களில் நடித்து வரும் இப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு கோப்ரா என்று டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மைக்கு என தெரியவில்லை. வரும் கிறிஸ்துமஸ் அன்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் கூறியபடியே சீயான் 58 படத்தின் டைட்டில் கோப்ரா என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ டைட்டில் லுக் போஸ்டர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.