Vijaysethupathi Enotional Press Meet

YouTube video

Bigg Boss Vijayalakshmi Sister Marriage : தமிழ் சினிமாவில் சென்னை 28 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் விஜயலட்சுமி. இவருக்கு கனிமொழி என்ற அக்காவும் நிரஞ்சனி என்ற தங்கையும் உள்ளனர்.

இவர்கள் மூவரும் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள்கள் ஆவர். கனிமொழி இயக்குனர் திருவை திருமணம் செய்து கொண்டார். நடிகை விஜயலட்சுமி பண்டிகை பட இயக்குனர் பெராஸ்-ஐ திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இவர்களின் தங்கை நிரஞ்சனி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. இப்படத்தை பார்த்து வட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட தொலைபேசி வாயிலாக இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது தேசிங்கு பெரியசாமிக்கும் நடிகை நிரஞ்சனிக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக இயக்குனர் திரு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திருமண பத்திரிகையை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இவர்களின் திருமணத்திற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.