Vijayakanth Son Vijaya Prabakaran First Movie
Vijayakanth Son Vijaya Prabakaran First Movie

கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijayakanth Son Vijaya Prabakaran First Movie : தமிழ் சினிமாவில் 1980 – 90களில் முன்னணி நடிகராக வலம் வரும் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் தமிழ் சினிமா வளர்ச்சிக்காக பெரும் உழைப்பைக் கொடுத்தவர்.

மேலும் தேமுதிக என்ற புதிய கட்சியைத் தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய இளைய மகன் சண்முகபாண்டியன் சகாப்தம் என்ற திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகி இருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து மதுரை வீரன் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது மித்ரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவரைத் தொடர்ந்து கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரன் அவர்களும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்திற்காக கடுமையாக ஒர்க் அவுட் செய்து வருகிறார். இது குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்று அவரை தொடர்பு கொண்டு கேட்ட போது நிச்சயம் அப்பாவின் பெயரை காப்பாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் விஜய் பிரபாகரனிடம் கேப்டன் விஜயகாந்தின் சாயல் அப்படியே இருப்பதே அவருக்கு மிகப்பெரிய பலம். அதன் காரணமாகவே அவர் நடிக்க வருவதாக அவருடைய நண்பர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.