YouTube video

ஆந்திராவில் முடியும் போது தமிழகத்தில் ஏன் இதைச் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

Captain Vijayakanth Request to CM : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் தற்போது தான் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இருப்பினும் நடுத்தரவர்க்க மக்களின் வாழ்வாதாரம் இன்னும் பழைய நிலைக்கு திரும்பியதாக தெரியவில்லை.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தவறி விழுந்த கலைஞர்.. பதறியடித்து ஓடிய விஜய் – இதுவரை நீங்கள் பார்த்திராத வீடியோ இதோ.!

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆந்திராவில் அமல்படுத்தப்பட்டுள்ள திட்டம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டம் ஆந்திராவில் சாத்தியமாகும் போது தமிழகத்தில் ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது வாகன ஓட்டுநர் உரிமம், காப்பீடு, தரச்சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்க ₹10,000 வரை தாங்கள் செலவு செய்வதாக ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

விஜய் சேதுபதியின் அடுத்த படம்.. எதிர்பார்ப்பை கூட்டும் கூட்டணி – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

எனவே, ஆந்திராவில் வாகன மித்ரா திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் ரூபாய் வழங்குவது சாத்தியமாகும் போது, தமிழகத்திலும் இதுபோன்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்து, நமது ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

விஜயகாந்தின் இந்த கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்குமா என்பதை பொறத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.