அமெரிக்க அதிபரையும் மிஞ்சிய தளபதி விஜய்

மாஸ்டர் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்வீட்டின் லைக்குகளையும் முறியடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயற்கை தளபதி விஜயுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீஸர் தீபாவளித் திருநாளான இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த அறிவிப்பு குறித்த பதிவின் லைக்குகளையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதிவிட்ட பதிவுகளையும் விஜய் ரசிகர்கள் ஒப்பிட்டு உள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இலக்குகளை விட தளபதி விஜய் மாஸ்டர் டீசர் குறித்த பதிவின் லைக்குகள் அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.