Vijay Visit to Atlee Office

பிரபல இயக்குனரின் அலுவலகத்தில் தளபதி விஜய் இருப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Vijay Visit to Atlee Office : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் பேரரசு, லோகேஷ் கனகராஜ், மகிழ்திருமேனி, நெல்சன் திலிப் குமார் என பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. அதேசமயம் இந்த படத்தை அட்லி இயக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது தளபதி மிட்டாய் அட்லியின் அலுவலகத்திற்கு சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

இந்த வீடியோவை தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அப்போ தளபதி 65 திரைப்படத்தை இயக்கப்போவது அட்லீ தானா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதே சமயம் அட்லி தயாரிப்பில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அந்தகாரம் படம் பார்த்துவிட்டு பாராட்ட அட்லி அலுவலகத்திற்கு சென்றிருக்கலாம் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தளபதி விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் இதுவரை தெறி, மெர்சல், பிகில் என மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.