Vijay & ADMK : விஜய் செய்தது மட்டும் சரியா? ஊருக்கு ஒரு நியாயம்.. அவருக்கு ஒரு நியாயமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த அதிமுக அரசின் இலவச திட்டங்களை விமர்சனம் செய்து நடித்திருந்தார்.
இது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதன் பின்னர் அதிமுக அரசின் தொடர் எதிர்ப்புகளால் படத்தில் இருந்து அந்த காட்சி நீக்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது விஜய் ஒரு முறை மக்களுக்கு தான் அளித்த பொருட்களில் விஜயின் ஸ்டிக்கர் ஒட்டி பொருட்களை கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் நீங்க பண்ணா தப்பு இல்லையா என அந்த புகைப்படங்களை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால் அது விஜயின் சொந்த செய்த உதவிகள், அரசு செய்தது நம்முடைய வரி பணத்தில் என்பது நினைவில் வைத்து கொள்ள வேண்டும். இவை இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது என்பது உண்மை.